தூத்துக்குடி
சாத்தான்குளம் யூனியன் ஆணையாளர் அதிரடி மாற்றம்
|சாத்தான்குளம் யூனியன் ஆணையாளர் அதிரடியா இட மாற்றம் செய்யப்பட்டார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் கடந்தமாதம் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், யூனியன் ஆணையாளர் ராணி, வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள தாமதம் செய்கிறார் எனவும், யூனியன் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து யூனியன் தலைவரிடமும் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் சாத்தான்குளம் யூனியன் ஆணையராக இருந்த ராணி கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோன்று. கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த சுரேஷ் யூனியன் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். மேலும், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, சாத்தான்குளம் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றும் செய்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.