< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சாத்தான்குளம் கொலை வழக்கு: கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
|25 Aug 2023 3:35 PM IST
ஜாமீன் கோரி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவின் விசாரணை செப்டம்பர் 8-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கியதில் தந்தை-மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவின் விசாரணையை செப்டம்பர் 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.