< Back
மாநில செய்திகள்
சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற கூட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற கூட்டம்

தினத்தந்தி
|
29 Jan 2023 12:15 AM IST

சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய் தலைமை தாங்கினார். துணை தலைவர் மாரியம்மாள், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ஆறுமுகம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அடிப்படை தேவைகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜோசப், மன்ற உறுப்பினர்கள் சுந்தர், ஞானஜோதி கிறிஸ்துமஸ், ஜோசப் அலெக்ஸ், ஜான்சிராணி, ஸ்டேன்லி, லிசா, இந்திரா, மகாராஜன், தேவனேசம், கற்பகவள்ளி, லிங்கபாண்டி மற்றும் பேரூராட்சி மன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்