< Back
மாநில செய்திகள்
கள்ளச்சாராய உயிர் பலி: போலீஸ் மெத்தன போக்கு- சசிகலா வேதனை
மாநில செய்திகள்

கள்ளச்சாராய உயிர் பலி: போலீஸ் மெத்தன போக்கு- சசிகலா வேதனை

தினத்தந்தி
|
14 May 2023 7:30 PM IST

தி.மு.க. ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக போலீஸ்துறை கள்ளச்சாராயத்தை தடுக்க எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் மெத்தன போக்கோடு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை,

சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்துக்கு அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் சுரேஷ், சங்கர், தரணிவேல், ராஜமூர்த்தி ஆகிய 4 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மேலும் 12 பேர் மிகவும் பாதிப்படைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ள தி.மு.க. தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க. ஆட்சியையும், கள்ளச்சாராயத்தையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது. எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ? அப்போதெல்லாம் கள்ளச்சாராய கலாசாரமும் தலைவிரித்தாடும்.

தி.மு.க. ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக போலீஸ்துறை கள்ளச்சாராயத்தை தடுக்க எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் மெத்தன போக்கோடு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்