< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோடு, திருப்பூரில் சசிகலா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம்
|14 July 2023 6:34 PM IST
சசிகலா நாளை சுற்றுப்பயணம் செல்ல இருந்த நிலையில், பயண தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இந்த மாதம் 15, 16-ந்தேதிகளில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது பயண தேதி மாற்றப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி வரும் 22-ந்தேதி காலை 11 மணிக்கு சென்னை தி-நகர் இல்லத்தில் இருந்து புறப்படும் சசிகலா, கோவை வழியாக ஈரோடு மாவட்டத்திற்கு செல்கிறார். மறுநாள் திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில வாரங்கள் ஓய்வில் இருந்த சசிகலா, மீண்டும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.