< Back
மாநில செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் சசிகலா சுற்றுப்பயணம்
மாநில செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் சசிகலா சுற்றுப்பயணம்

தினத்தந்தி
|
13 Aug 2024 10:55 AM IST

இன்று முதல் வரும் 18ம் தேதி வரை சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

நெல்லை,

'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' என்ற தலைப்பில் பல்வேறு பகுதிகளில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனையொட்ட்டி நேற்று மாலை சசிகலா நெல்லை வந்தடைந்தார்.அவருக்கு மேளதாளங்களுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

நெல்லை , நாங்குநேரி ,பாளையங்கோட்டை , அம்பாசமுத்திரம் , ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்லும் சசிகலா தொண்டர்கள் மற்றும் மக்களை சந்திக்கிறார்.

மேலும் செய்திகள்