< Back
மாநில செய்திகள்
திருத்தணி முருகன் கோயிலில் சசிகலா சாமி தரிசனம்..!
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில் சசிகலா சாமி தரிசனம்..!

தினத்தந்தி
|
26 Jun 2022 6:11 PM IST

திருத்தணி முருகன் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.

சென்னை,

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள தொண்டர்களை சந்திப்பதற்காக சசிகலா அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி செல்வதற்காக தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்ட சசிகலாவுக்கு பட்டாசு வெடித்தும், மாலைகள் மற்றும் பூங்கொத்து கொடுத்தும் தொண்டர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், தொண்டர்களை சந்திப்பதற்காக திருத்தணி வந்துள்ள சசிகலா அங்குள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார்.

மேலும் செய்திகள்