பங்காரு அடிகளாரின் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி
|பங்காரு அடிகளாரின் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இதனிடையே பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளதால் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின் பங்காரு அடிகளாரின் குடும்பத்தினருக்கு சசிகலா ஆறுதல் கூறினார்.
முன்னதாக பங்காரு அடிகளாரின் உடலுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.