< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க்கை வரலாறு கண்காட்சி
|28 Oct 2022 6:37 PM IST
சென்னை விமான நிலையத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க்கை வரலாறு கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் ஒற்றுமை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக மீனம்பாக்கம் உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க்கை வரலாறு கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சியை மத்திய மந்திரி வி.கே.சிங் தொடங்கி வைத்தார். இதில் விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார், மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒரு வாரம் நடக்கும் இந்த கண்காட்சியை விமான பயணிகள் பார்க்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.