முதல்-அமைச்சரை சந்தித்து மகளின் திருமண அழைப்பிதழை வழங்கிய சரத்குமார்
|சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
சென்னை,
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போடி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படம் வரலட்சுமிக்கு சிறந்த கம்பேக்காக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து விக்ரம் வேதா, சர்க்கார், போன்ற பல படங்களில் குணசித்ர வேடத்திலும், வில்லியாகவும் நடித்து மிரட்டி இருந்தார்.
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இரு வீட்டார் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தொடர்ந்து, வரலட்சுமியின் திருமணம் அடுத்த மாதம் (ஜூலை 2-ம் தேதி) தாய்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று சரத்குமார் குடும்பத்தினர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வரலட்சுமி திருமண அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர். அப்போது சரத்குமாருடன் அவரது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் மகள் வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் இருந்தனர்.