< Back
மாநில செய்திகள்
செய்யூர் அருகே போலீஸ்காரர் கொலை வழக்கில் உறவினர் கோர்ட்டில் சரண்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செய்யூர் அருகே போலீஸ்காரர் கொலை வழக்கில் உறவினர் கோர்ட்டில் சரண்

தினத்தந்தி
|
2 Sept 2022 2:55 PM IST

செய்யூர் அருகே போலீஸ்காரர் கொலை வழக்கில் உறவினர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த வடக்கு செய்யூர் பகுதியை சேர்ந்தவர் காமேஷ் குமார் (வயது 37). இவர் சென்னையை அடுத்த நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு செய்யூர் பகுதியில் விளைநிலங்கள் உள்ளன. இந்த நிலையில் காமேஷ்குமார் விளை நிலத்தை பார்த்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். சால்ட் ரோடு பகுதியில் செல்போனில் பேசி கொண்டிருந்தபோது எதிர் திசையில் காரில் வந்த காமேஷ் குமாரின் அக்காள் கணவரான மதன்பிரபு (35) மற்றும் அவரது நண்பர்கள் காமேஷ் குமார் மீது காரை மோதி விட்டு சாலையோரம் உள்ள சுவரின் மீதும் மோதியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த காமேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக வடக்கு செய்யூரை சேர்ந்த தாமோதரன் (35), பிரசாத் (32), பார்த்திபன் (32), பரசுராமன்(35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் மதன் பிரபு செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் கோர்ட்டு நீதிபதி முன்பு சரண் அடைந்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்