மயிலாடுதுறை
மரக்கன்றுகள் நடும் பணி
|சீர்காழி வட்டாரத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை உதவி வேளாண் இயக்குனர் தொடங்கி வைத்தார்
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சியில் பசுமை போர்வை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை சீர்காழி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராஜராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், விவசாயிகள் மிகவும் சிறப்பான இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் நடப்படும் மரக்கன்றுகள் வருகிற 10 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு பயனளிக்கும். சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட 37 ஊராட்சிகளில் சுமார் 32,000 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் இலவசமாக மரக்கன்றுகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார். இதில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வேதை ராஜன், சேகர், அலெக்சாண்டர், முன்னோடி விவசாயி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.