< Back
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் பணி
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மரக்கன்றுகள் நடும் பணி

தினத்தந்தி
|
14 July 2023 1:00 AM IST

மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளின் இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதன்படி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் அனுமதியுடன் சீர்காழி அருகே உள்ள பூண்டியாங்குப்பம் முதல் சீர்காழி சட்டநாதபுரம் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை சென்டர் மீடியனில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இதில் புறவழிச்சாலை பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இந்த பகுதியில் 60 கிலோமீட்டர் தொலைவுக்கு மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்