< Back
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
9 Jun 2023 12:20 AM IST

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர் சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் புளி, நாவல், அரசு, ஆலமரம், புங்கன், பாதாம், இலுப்பை உள்ளிட்ட பல்வேறு மரங்களுடன் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, கோட்ட பொறியாளர் வேல்ராஜ், உதவிக் கோட்ட பொறியாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்