காஞ்சிபுரம்
மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
|தேவரியம்பாக்கம் ஊராட்சியினை பசுமையாக மாற்ற, ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சீபுரம் அடுத்த தேவரியம்பாக்கம் ஊராட்சியினை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் த.அஜய்குமார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் தனது ஊராட்சியினை பசுமையாக மாற்ற, ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நல்லோர் வட்டத்தின் நிறுவனர் நல்லோர் வட்டம் பாலு கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, நல்லோர் வட்டம் அமைப்பு சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் தங்களுடைய கிராமங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு போக வேண்டும் என்ற நோக்கத்தில் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் செயல்படுகிறார். ஒரு கிராமத்தை ஊராட்சி மன்ற தலைவரால் மட்டுமே முன்னேற்றம் அடைய செய்திட முடியாது. பஞ்சாயத்து உறுப்பினர்களும் பொதுமக்களும், அரசு துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கோவிந்தராஜன் வார்டு உறுப்பினர்கள், விவசாயத் துறை அலுவலர் கலந்து கொண்டனர்.