< Back
மாநில செய்திகள்
மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
25 Aug 2022 11:45 PM IST

டி.புதூர் கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. டி.புதூர் கிராமத்தில் 1½ ஏக்கர் பரப்பில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

புங்கை, வேம்பு, பூவரசன், புளி போன்ற மரக்கன்றுகளை நட்டு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பூங்கொடி, கலவை தாசில்தார் சமீம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சானவாஸ், ஜெயஸ்ரீ, மண்டல துணை தாசில்தார் சத்யா, வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம நிர்வாக அதிகாரி ஸ்ரீதர், ஒன்றியக்குழு உறுப்பினர் தேவன், ஊராட்சி மன்ற தலைவர் கோகுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்