< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
|4 Oct 2023 3:30 AM IST
சோலாடி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
பந்தலூர் அருகே பிதிர்காடு சோலாடி அரசு உண்டு உறைவிட நடுநிலை பள்ளியில் இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விக்னேஷ்வரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் முருகன் வரவேற்றார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவீந்திரன், அஜித் ஆகியோர் இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து விளக்கம் அளித்தனர். பள்ளி ஆசிரியர்கள் பூங்கொடி, ஞானபிரியா பிரகாஷ் மற்றும் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். முடிவில் ஆசிரியர் பரமசிவன் நன்றி கூறினார்.