< Back
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
2 Sept 2023 12:18 AM IST

முதுகுளத்தூரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் நகர த.மு.மு.க. சார்பில் கட்சியின் 29-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் எம்.வாவாராவுத்தர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளார் சகாபுதீன், மாவட்ட அணி நிர்வாகிகள் சகுபர் சாதிக், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நகர அலுவலகத்தில் நகர செயலாளர் அப்துல் ரகுமான் த.மு.மு.க. கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, முதுகுளத்தூர் காவல் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தனர். முதுகுளத்தூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளி, பசும்குடில் என்ற ஆதரவற்ற முதியோர் மற்றும் மாணவிகள் தங்கியுள்ள பசும்குடில் காப்பகத்திலும் 60 ேபருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ம.ம.க. நகர செயலாளர் முகமது அலி, நகர பொருளாளர் முகைதீன் அப்துல் காதர், நகர துணை நிர்வாகிகள் முகமது காசிம், சீனி முகம்மது, சாகுல் ஹமீது, ஷேக் ஜமீல் அகமது, சாகுல் நகர இளைஞரணி செயலாளர் மீரா, வார்டு நிர்வாகிகள் சீனி முகமது, யூசுப், முகமது ஆரிப், ஜாகிர் உசேன், நெய்னா முகம்மது, அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்