< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
|29 Aug 2023 3:00 AM IST
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
ஊட்டி
நீலகிரி மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் டி.எப்.எல்.யு., பி.பீ.எம்.எஸ். சங்கங்கள் இணைந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இதில் சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து மரக்கன்றுகளை பல்வேறு இடங்களில் நடவு செய்தனர். இதில் பாரதிய மஸ்தூர் சங்க மாவட்ட செயலாளர் மகேஷ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.