< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
மரக்கன்று நடும் நிகழ்ச்சி
|9 Aug 2023 12:15 AM IST
மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது
காரைக்குடி
காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியில் நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக அரசமரம் என்னும் போதிமர கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நமது உரிமை பாதுகாப்பு இயக்க தலைவரும், காரைக்குடி நகர் மன்ற உறுப்பினருமான பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இயக்கத்தின் செயலாளர் கண்ணன், பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி வளாகத்தில் அரசமர கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் நாகநாதன் தொடங்கி வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை நுபி வானவில் சங்க ஒருங்கிணைப்பாளர் அனந்தகிருஷ்ணன் செய்திருந்தார். இதில் இயக்க நிர்வாகிகள் முகமது ஆசிக், சாமிநாதன், பலர் கலந்து கொண்டனர்.