புதுக்கோட்டை
மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
|மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை அருகே வடவாளத்தில் சி.எஸ்.கே. அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சித்திரைசெல்வகுமார் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பழ வகை மரக்கன்றுகளை வழங்கினார். சுமார் 4 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த மரக்கன்றுகள் அனைத்தும் பழ வகைகளை சேர்ந்ததாகும். ஊட்டச்சத்து குறைபாடுகள் காணப்படுகிற நிலையில், இந்த மரக்கன்றுகள் வளர்ந்து பழங்களை தரும் போது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இம்மரக்கன்றுகள் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளதாகவும் அறக்கட்டளை சார்பில் தெரிவித்தனர். முன்னதாக இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அருள் சிறுமலர் ஞானப்பிரகாசம், ஒன்றிய குழு உறுப்பினர் கலியமூர்த்தி, வடவாளம் ஜெகன், அன்புச்செல்வன் அம்பலம், ஆர்.எஸ்.கே. அருண் அம்பலம் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.