< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
அரசு மருத்துவக்கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
|8 Jun 2022 10:22 PM IST
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் உஷா தலைமை தாங்கினார். டாக்டர் நேரு, இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மகுடமுடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி வளாகம் மற்றும் மருத்துவமனை வளாக பகுதியில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் செயலாளர் சுரேஷ்ராஜ், பொருளாளர் தரணிகவாஸ்கர், கல்லூரி பேராசிரியர்கள் செல்வராஜ், ஷமீம், சவுமியா, அனிதாராணி, இணை பேராசிரியர் அனுசுயா மற்றும் டாக்டர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.