< Back
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் விழா
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா

தினத்தந்தி
|
7 Jun 2022 11:55 PM IST

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

திருவண்ணாமலை

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.

கூடுதல் மாவட்ட நீதிபதி இருசன் பூங்குழலி முன்னிலை வகித்தார். தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரன் வரவேற்றார்.

விழாவில் சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான எம்.கே.ஜமுனா தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பார் அசோசியேஷன் தலைவர் ராமகிருஷ்ணன், லாயர் அசோசியேஷன் மூத்த வழக்கறிஞர் பழனி, மூத்த வழக்கறிஞர் பாபு உள்பட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்