< Back
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் விழா
சிவகங்கை
மாநில செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா

தினத்தந்தி
|
14 Jun 2023 12:15 AM IST

மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அலங்காரம் குளத்தை பசுமையாக்கும் முயற்சியில் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது

மானாமதுரை,

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மானாமதுரை அருகே உள்ள மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அலங்காரம் குளத்தை பசுமையாக்கும் முயற்சியில் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது. மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி பங்கேற்று மரக்கன்று நட்டு வைத்தார் பின்னர் கிராம மக்களுக்கு வனத்துறை சார்பில் செம்மரம் மற்றும் சந்தன மர கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மங்களம் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா, மாவட்ட வனத்துறை அதிகாரி பிரபா, பொதுப்பணித்துறை அதிகாரி செந்தில்குமார், யூனியன் துணை சேர்மன் முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர் ராஜாமணி, ராஜ கம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப்ராகுமான், நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமுருகன், யூனியன் கவுன்சிலர் ராதா சிவசந்திரன், மேலபசலை ஊராட்சி மன்ற தலைவர் சிந்துஜா, சடையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா செய்திருந்தார்.

மேலும் செய்திகள்