< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் விழா
|12 Jun 2023 12:15 AM IST
விக்கிரவாண்டி அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விக்கிரவாண்டி,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் சார்பில் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம்-புதுச்சேரி சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதற்கு நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ் தலைமை தாங்கி 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கிருந்த சாலை பணியாளர்களிடம், மரக்கன்றுகளை நன்கு பராமரித்து வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் சிவசேனா, உதவி கோட்ட பொறியாளர் தனராஜன், உதவி பொறியாளர்கள் அனிதா, வசந்தபிரியா, விஜயலட்சுமி, சாலை ஆய்வாளர்கள் சாந்தி, அருள்மொழி மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.