< Back
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் விழா
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா

தினத்தந்தி
|
7 Jun 2023 2:47 AM IST

நெல்லையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நெல்லை மாநகர் பெருமாள்புரம் அன்புநகர் எஸ்.டி.சி. கல்லூரி சாலையில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலர் அரசகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்