< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் விழா
|5 March 2023 12:15 AM IST
உலக வனஉயிரின தினத்தை முன்னிட்டு சிவகிரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
சிவகிரி:
உலக வனஉயிரின தினத்தை முன்னிட்டு சிவகிரி ராஜ் நியூ நர்சரி பிரைமரி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா, வனவர்கள் அசோக்குமார், அஜித்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அவைகளை வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ராமர், துணை முதல்வர் ராஜம்மாள், வனப்பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.