< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
மரக்கன்று நடும் விழா
|19 Feb 2023 12:15 AM IST
புதுக்கோட்டை அருகே ராமச்சந்திரபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
சாயர்புரம்:
புதுக்கோட்டை அருகே ராமச்சந்திரபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், புதுக்கோட்டை மரம் வரம் நண்பர்கள், நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ஒற்றுமையே வலிமை சங்க தலைவர் சக்திவேல், செயலாளர் லட்சுமணன், பொருளாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைைம தாங்கினர். முகாமில் 88 பேர் கலந்து கொண்டனர். இதில் 19 பேர் இலவச சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டனர். புதுக்கோட்டை மரம் வரம் ராமன் சார்பில் 25 மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பொதுமக்கள், முன்னாள், இன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.