< Back
மாநில செய்திகள்
மரக்கன்று நடும் விழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

மரக்கன்று நடும் விழா

தினத்தந்தி
|
21 July 2022 6:55 PM IST

வாஞ்சி மணியாச்சி ெரயில்நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடும் விதத்தில் மத்திய அரசு அமிர்த வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் நேற்று காலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது. வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலைய ரெயில்வே பாதுகாப்பு கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர் கரிஸ்சந்திரன் தலைமை தாங்கினார். கடம்பூர் நாடார் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் சாரணர் இயக்க மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

மேலும் செய்திகள்