< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
மரக்கன்று நடும் விழா
|9 Oct 2023 12:15 AM IST
நீர்முளை ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா
வாய்மேடு:
தலைஞாயிறை அடுத்த நீர்முளை ஊராட்சியில் நீர்முளை சித்த ஆஸ்பத்திரி மற்றும் வேதாரண்யம் இயற்கை அரண் இளைஞர் அமைப்பு ஆகியவை இணைந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி மதியழகன் தலைமை தாங்கினார். நீர்முளை சித்த மருத்துவ அலுவலர் சந்தியாதிவாகர் கலந்து கொண்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், இயற்கை அரண் தன்னார்வலர் அமைப்பின் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.