< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் விழா
|6 Oct 2023 12:21 AM IST
காரியாண்டி பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
இட்டமொழி:
காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் திருக்குறுங்குடி டி.வி.எஸ். அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ராமகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் வளர்மதி சேர்மத்துரை மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை கள இயக்குனர் லட்சுமி நாராயணன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.