திருவண்ணாமலை
மரக்கன்றுகள் நடும் விழா
|வந்தவாசி அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த பாதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் ரோட்டரி சங்கங்கள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
வந்தவாசி மற்றும் சென்னை போர்ட் சிட்டி ரோட்டரி சங்கங்கள், சென்னை பசுமை அமைப்பு ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் பி.பரணிதரன் தலைமை தாங்கினார்.
ஓய்வுபெற்ற மருத்துவ இணை இயக்குனர் எஸ்.குமார், சென்னை பசுமை அமைப்பின் தலைவர் மூர்த்தி, சங்க மாவட்ட துணைத்தலைவர் கே.பி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பி.குமார் வரவேற்றார்.
வந்தவாசி ஒன்றியக்குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம், வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் ந.ராஜன்பாபு, சங்க மாவட்ட தலைவர் சி.முத்துசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று 1000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர்.
விழாவில் தேக்கு, மா, கொய்யா, தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள் கே.குணசேகரன், என்.ரமேஷ், எஸ்.ஆர்.தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.