விருதுநகர்
மரக்கன்றுகள் நடும் விழா
|மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி டைமண்ட் ஆகியவை இணைந்து உலக இயற்கை பாதுகாப்பு தினம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் உஷா தேவி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியின் தாவரவியல் துறை உதவி பேராசிரியர் கவுசல்யாதேவி கலந்து கொண்டு இயற்கையின் சிறப்புகளையும், அவற்றை பாதுகாக்கும் நெறிமுறைகள் குறித்தும், மரம் வளர்ப்பு அவசியம் குறித்தும் பேசினார். விழாவில் ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி டைமண்ட் தலைவர் சாரதா, செயலாளர் கார்த்தீஸ்வரி, துணைத்தலைவர் செல்வராணி, ரம்யா, ராஜகோபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துமாரி, கற்பகச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.