< Back
மாநில செய்திகள்
தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தினத்தந்தி
|
16 Dec 2022 3:03 AM IST

தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மணப்பாறை நகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாக கூறி, அதை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் நேற்று தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் பஸ் நிலையம் மற்றும் விராலிமலை சாலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய பகுதிகளில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மணப்பாறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் பதவி உயர்வை மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர் அளிக்காமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும், 708 ரூபாய் தின கூலியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வழிவகை செய்வதாக கூறியதையடுத்து தூய்மை பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்