திருச்சி
தூய்மை பணியாளர்கள், காவலர்கள் ஆர்ப்பாட்டம்
|தூய்மை பணியாளர்கள், காவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதில் மாவட்ட ஊரக வளர்ச்சி நிர்வாகம் மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வருவதாகவும், அதை கண்டித்தும் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது சிறப்பு காலமுறை ஊதியத்தை நிலுவை தொகையுடன் உடனே வழங்கவேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ள சீருடை, கையுறை, முக கவசம், கிருமிநாசினி மற்றும் பணிதளவாடங்களை உடனே வழங்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பணி செய்து வரும் தூய்மை காவலர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.