< Back
மாநில செய்திகள்
தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
15 Oct 2023 12:07 AM IST

முக்கூடலில் தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முக்கூடல்:

முக்கூடல் கம்பளத்தார் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 35). இவரது மனைவி ஸ்ரீவித்யா. இவர்கள் இருவரும் நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். நேற்று காலையில் தங்கராஜின் மனைவி ஸ்ரீவித்யா வேலைக்கு சென்று விட்டார். பின்னர் தங்கராஜ் தனது பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அவர்களை வெளியில் விளையாட சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் முக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தங்கராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்