< Back
மாநில செய்திகள்
தொட்டியம் பேரூராட்சியில்  தூய்மைப்பணி
திருச்சி
மாநில செய்திகள்

தொட்டியம் பேரூராட்சியில் தூய்மைப்பணி

தினத்தந்தி
|
11 Jun 2023 12:06 AM IST

தொட்டியம் பேரூராட்சியில் தூய்மைப்பணி நடைபெற்றது.

தொட்டியம் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் தூய்மைப்பணி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.ராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் வெ.பிரந்தநாயகி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி அனைத்து பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சேர்ந்து தூய்மைக்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்பு சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. பின்பு 8-வது வார்டு காந்தி ரோடு பகுதியில் கட்டிட இடிபாடு கழிவுகள் அகற்றப்பட்டு தெரு பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் புல், பூண்டுகளை, வெட்டி சுத்தம் செய்யப்பட்டன. மேலும் திருச்சி மெயின் ரோட்டில் இருந்த அனுமதியற்ற விளம்பர பலகைகள், பதாகைகள் பேரூராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் கண்ணன், கதிரேசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்