< Back
மாநில செய்திகள்
திருத்தணியில் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு - அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணியில் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு - அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரம்

தினத்தந்தி
|
30 July 2022 2:20 PM IST

திருத்தணியில் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதை தொடர்ந்த அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஜோதிநகர் பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரியை திருத்தணி ஒன்றிய நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த நிலையில் சில நாட்களாக இந்த ஏரியில் உள்ள மீன்கள் அடிக்கடி செத்து மிதப்பதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, திருத்தணி நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் வணிக வளாகங்களிருந்து இருந்து வரும் கழிவுகள் நேரடியாக ஏரியில் கலப்பதால் ஏரி மாசடைந்து மீன்கள் இறப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் செய்திகள்