திருவாரூர்
சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
|சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
மன்னார்குடியில் இருந்து வடசேரிவழி பட்டுக்கோட்டை நெடுஞ்சாலை, மதுக்கூர் நெடுஞ்சாலை, திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை, தஞ்சை நெடுஞ்சாலை, கும்பகோணம், திருவாரூர் நெடுஞ்சாலை ஓரங்களிலும் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுகின்றன. நகரத்தின் வெளிப்புற பகுதியில் நெடுஞ்சாலை ஓரங்களிலும் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதால் பிளாஸ்டிக் கழிவுகளும், மற்ற கழிவுகளும் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. இதனை சுத்தப்படுத்துவதற்கும், அப்புற படுத்துவதற்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் காட்சியளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மன்னார்குடியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி, சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.