< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
மேல்சிறுவள்ளூர்பெரியநாயகி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
|17 Aug 2023 12:15 AM IST
மேல்சிறுவள்ளூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிறுவள்ளூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி அமாவாசை நாளான நேற்று உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஊர் எல்லையில் இருந்து பெண்கள் பால்குடங்களை எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதன்பிறகு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் 108 சங்குகள் வைக்கப்பட்டு, சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு வானவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.