< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் சந்தீப் ராய் ரத்தோர்
|30 Jun 2023 2:18 PM IST
சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை,
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி வந்தநிலையில், இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனை தொடர்ந்து புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
மேலும், சென்னை புதிய காவல் ஆணையராக போலீஸ் அகாடமி டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய காவல் ஆணையரிடம் தனது பொறுப்பை சங்கர் ஜிவால் ஒப்படைத்தார்.