கள்ளக்குறிச்சி
சங்கராபுரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம்
|முகரம் பண்டிகையையொட்டி சங்கராபுரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.
சங்கராபுரம்.
முகமது நபியின் பேரன் முகரம் மாதத்தில் 10 நாட்கள் போரிட்டு உயிரிழந்தார். இதனை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் முகரம் பண்டிகை முஸ்லிம்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாலை சங்கராபுரத்தில் முகரம் பண்டிகையையொட்டி சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் சங்கராபுரம் மேட்டுத்தெருவில் இருந்து புறப்பட்டு திருக்கோவிலூர் சாலை வழியாக மணிநதியை அடைந்தது. இதேபோல் பூட்டை, பாவளம், தேவபாண்டலம் பகுதியில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கியசாலைகளின் வழியாக சங்கராபுரம் மணிநதியை அடைந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். .ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், விஜி, சத்யன், இளவழகி, சந்திரசேகரன் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.