< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
சித்தி விநாயகர் கோவிலில் சந்தனக்காப்பு விழா
|12 Jun 2023 12:11 AM IST
சித்தி விநாயகர் கோவிலில் சந்தனக்காப்பு விழா நடைபெற்றது.
இலுப்பூர் அருகே மலைக்குடிப்பட்டியில் நாகாத்தம்மன், சக்திவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான சந்தனக்காப்பு அபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி திரளான பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.