< Back
மாநில செய்திகள்
காட்டுமஸ்தான் சாஹிபு ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு பெருவிழா
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

காட்டுமஸ்தான் சாஹிபு ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு பெருவிழா

தினத்தந்தி
|
9 May 2023 12:09 AM IST

ஆவுடையார்கோவில் அருகே காட்டுமஸ்தான் சாஹிபு ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு பெருவிழா நடைபெற்றது.

ஆவுடையார்கோவில் அருகே காரணியாேனந்தல் கிராமத்தில் காட்டுமஸ்தான் சாஹிபு ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் சந்தனக்கூடு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று அதிகாலை வாணவேடிக்கை மற்றும் நாட்டியக்குதிரை நடனத்துடன் இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடனும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மல்லிகைப் பூக்களை சந்தனக்கூடு மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். காரணியானேந்தல் பெரிய பள்ளிவாசலில் தொடங்கிய சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக காட்டுமஸ்தான் தர்காவை வந்தடைந்தது. இதில், அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில், அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்