< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
முள்ளாட்சி மாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்
|14 March 2023 12:15 AM IST
முள்ளாட்சி மாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்
திருத்துறைப்பூண்டியில் உள்ள முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் ஆண்டு விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு வருகிற 19-ந்தேதி தீ மிதி திருவிழாவும், தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது. நேற்று திருத்துறைப்பூண்டி யாதவர்கள் மண்டகப்படியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து காமதேனு வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகையன் மற்றும் மண்டகப்படி உபயதாரர்கள் செய்திருந்தனர்.