< Back
மாநில செய்திகள்
சந்தன மரம் வெட்டி கடத்தல்
அரியலூர்
மாநில செய்திகள்

சந்தன மரம் வெட்டி கடத்தல்

தினத்தந்தி
|
3 May 2023 12:28 AM IST

சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். வெல்டிங் பட்டறையின் பின் பகுதியில் 2 சந்தன மரங்கள் வைத்து வளர்த்து வந்தார். அந்த சந்தன மரங்கள் நன்கு வளர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தபோது பட்டறையின் பின் பக்கமாக வந்த மர்ம நபர்கள் ஒரு சந்தன மரத்தை வெட்டி, கடத்தி சென்றனர். இது குறித்து தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின்பேரில் தா.பழூர் போலீசார் மற்றும் அரியலூர் மாவட்ட வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்