< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் பணி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் பணி

தினத்தந்தி
|
2 Aug 2022 3:08 PM GMT

திருவாடானை தாலுகாவில் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் பணி நடந்தது.

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் பணி நடந்தது.

உத்தரவு

முதல்-அமைச்சர் உத்தரவின்படி பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப் பாட்டில் உள்ள கண்மாய்களில் இருந்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு இலவசமாக வண்டல் மண் வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திருவாடானை தாலுகாவில் சுமார் 68 கண்மாய்களில் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்க மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.

அதனை தொடர்ந்து நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழையனக்கோட்டை கண்மாயில் சுமார் 9 விவசாயி களுக்கு வண்டல் மண் எடுக்க உத்தரவு வழங்கப்பட்டது.

வண்டல் மண்

மேலும் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்தி கேயன் முன்னிலையில் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில் உதவி பொறியாளர் முத்தமிழரசன், மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, வருவாய் ஆய்வாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் அசாருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்