< Back
மாநில செய்திகள்
கடம்பத்தூர் அருகே மணல் கடத்தல்; 4 பேருக்கு வலைவீச்சு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கடம்பத்தூர் அருகே மணல் கடத்தல்; 4 பேருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
4 Sept 2023 8:11 PM IST

கடம்பத்தூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய 4 பேர் யார் என விசாரித்து வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடம்பத்தூர், செஞ்சி பானம்பாக்கம், மடத்துக்குப்பம் போன்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது போலீசார் மடத்துக்குப்பம் ரெயில்வே டிராக் அருகே பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இருந்த 4 பேர் மோட்டார் சைக்கிளில் திருட்டுத்தனமாக மணல் எடுத்து வந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடினார்கள். போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய 4 பேர் யார் என விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்