< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தல்; தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
|26 Jan 2023 7:54 PM IST
கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தியதை போலீசாரை கண்டதும் தப்பி ஒடிவிட்டார்.
திருவாலங்காடு அருகே உள்ள ஒரத்தூர் கொசஸ்தலையாறு அருகே திருவாலங்காடு சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கொசஸ்தலை ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் ஒருவர் மணல் கடத்தியதை கண்டுபிடித்தனர். போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை விட்டு விட்டு அந்த நபர் தப்பி ஒடிவிட்டார். பின்னர் போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இது சம்பந்தமாக திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய நபரை தேடி வருகிறார்கள்.