< Back
மாநில செய்திகள்
மணல் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மணல் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்

தினத்தந்தி
|
3 Jun 2023 12:15 AM IST

மணல் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தொண்டி,

திருவாடானை தாலுகா அரசூர் கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதிக்குள் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக அரசூர் கிராம நிர்வாக அலுவலர் உமாதேவி திருவாடானை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது சைபுல் ஹிஷாம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் லாாியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்ததுடன் இதில் தொடர்புடைய ராமநாதபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராமநாதன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்